ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 ஆகஸ்ட் 2026: தேய்பிறை சஷ்டி விரதம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-19 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி இரவு 7.52 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : ரேவதி இரவு 8.29 வரை பிறகு அசுவினி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி

தேய்பிறை சஷ்டி விரதம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சக்தியழைப்பு விழா, உருள் தாண்டவக் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்.

திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உயர்வு

ரிஷபம் - போட்டி

மிதுனம் - புகழ்

கடகம் - நட்பு

சிம்மம் - அனுகூலம்

கன்னி - சிறப்பு

துலாம் - திடம்

விருச்சிகம் - கடமை

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - லாபம்

கும்பம் - அமைதி

மீனம் - பயணம்