பராபவ ஆண்டு, ஐப்பசி - 13 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி இரவு 11.55 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 1.45 வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருவீதியுலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் ஊஞ்சலில் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோவிலுக்குள் புறப்பாடு.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம்.
மேஷம் - நற்செயல்
ரிஷபம் - நலம்
மிதுனம் - நன்மை
கடகம் - தாமதம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - வரவு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - இன்பம்
தனுசு - இரக்கம்
மகரம் - விவேகம்
கும்பம் - பணிவு
மீனம் - உவகை