ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 மார்ச் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-16 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி காலை 8.26 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : மகம் பிற்பகல் 3.47 மணி வரை பிறகு பூரம்

யோகம் : மரண, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

பிரதோஷம், சிவன் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

இன்று பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பரமக்குடி அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகநாதப் பெருமாள் சூர்ணோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத - மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-சிறப்பு

மிதுனம்-வாழ்வு

கடகம்-ஆதரவு

சிம்மம்-கவனம்

கன்னி-வெற்றி

துலாம்- பணிவு

விருச்சிகம்-அமைதி

தனுசு- தாமதம்

மகரம்-நற்செயல்

கும்பம்-மேன்மை

மீனம்-பாராட்டு