ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஏப்ரல் 2026: நரசிம்ம ஜெயந்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-17 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 9.50 வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : சித்திரை பின்னிரவு 2.41 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம்

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. சுபமுகூர்த்த தினம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர்மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீசித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உயர்வு

ரிஷபம் - நன்மை

மிதுனம் - நற்செயல்

கடகம் - ஆதாயம்

சிம்மம் - சுகம்

கன்னி - மாற்றம்

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - பொறுப்பு

மகரம் - முயற்சி

கும்பம் - நட்பு

மீனம் - புகழ்