பராபவ ஆண்டு, புரட்டாசி-16 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி காலை 10.14 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : திருவாதிரை மறுநாள் விடியற்காலை 4.06 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
மத்யாஷ்டமி - மஹாவியதீபாதம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூடப் புறப்பாடு, திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
மேஷம் - பொறுமை
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - பண்பு
கடகம் - பாசம்
சிம்மம் - உயர்வு
கன்னி - விவேகம்
துலாம் - மாற்றம்
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - ஆக்கம்
மகரம் - மேன்மை
கும்பம் - கடமை
மீனம் - கவனம்