ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 ஜூன் 2026: நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-20 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை இரவு 8.23 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : பூராடம் நள்ளிரவு 12.10 வரை பிறகு உத்திராடம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா ஊஞ்சலில் காட்சி, விருஷப சேவை, திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் புதிய ரதத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம்.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு, திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - அன்பு

கடகம் - ஆதரவு

சிம்மம் - ஆதாயம்

கன்னி - வாழ்வு

துலாம் - இன்பம்

விருச்சிகம் - லாபம்

தனுசு - வெற்றி

மகரம் - பரிவு

கும்பம் - ஜெயம்

மீனம் - உற்சாகம்