ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 ஆகஸ்ட் 2026: ஆடிப்பெருக்கு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-18 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பஞ்சமி இரவு 9.13 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.06 வரை பிறகு ரேவதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

ஆடிப்பெருக்கு விழா

சகல நதி தீரங்களில் ஆடிப்பெருக்கு விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - யோகம்

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - உயர்வு

கடகம் - நற்செயல்

சிம்மம் - இன்பம்

கன்னி - உழைப்பு

துலாம் - சாதனை

விருச்சிகம் - சாதனை

தனுசு - முயற்சி

மகரம் - சுகம்

கும்பம் - விருத்தி

மீனம் - உற்சாகம்