விசுவாவசு ஆண்டு பங்குனி-20 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை காலை 8.51 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : சித்திரை இரவு 7.25 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம் பச்சை குதிரையில் பவனி. கள்ளக்குறிச்சி ஸ்ரீ கலியபெருமாள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்வித் தாயார் புறப்பாடு.
பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வார், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டி சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிவில் அபிஷேகம் கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட் ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம் பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். இருக்கன்குடி சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
மேஷம்-உறுதி
ரிஷபம்-பெருமை
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-தெளிவு
கன்னி-சுபம்
துலாம்- அடக்கம்
விருச்சிகம்-அமைதி
தனுசு- பரிசு
மகரம்-கவனம்
கும்பம்-கடமை
மீனம்-ஒழுக்கம்