ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 மே 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு வைகாசி-15 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி காலை 11.17 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : சுவாதி நண்பகல் 12.03 வரை பிறகு விசாகம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு

சுபமுகூர்த்த தினம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் வாமன அவதாரக் காட்சி. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி. காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ கூடலழகர் புஷ்ப விமானத்தில் பவனி. திருப்பத்தூர், திருப்புகழுர், காளையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம் பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பாராட்டு

ரிஷபம்-ஜெயம்

மிதுனம்-லாபம்

கடகம்-சுகம்

சிம்மம்-பாசம்

கன்னி-பண்பு

துலாம்-ஆதாயம்

விருச்சிகம்-இரக்கம்

தனுசு-பரிசு

மகரம்-பணிவு

கும்பம்-பாசம்

மீனம்-அன்பு