ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 மார்ச் 2026: சர்வ ஏகாதசி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-15 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி காலை 9.32 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 4.04 மணி வரை பிறகு மகம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சர்வ ஏகாதசி, காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு அபிஷேகம், வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

இன்று சர்வ ஏகாதசி. ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் பவனி. திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் ஆழித்தேரோட்டக் காட்சி. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேசுவரர் ரதோற்சவம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நட்பு

ரிஷபம்-நலம்

மிதுனம்-நன்மை

கடகம்-லாபம்

சிம்மம்-அன்பு

கன்னி-வரவு

துலாம்- செலவு

விருச்சிகம்-ஆதாயம்

தனுசு- மகிழ்ச்சி

மகரம்-சிறப்பு

கும்பம்-இன்பம்

மீனம்-உறுதி