ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஜூலை 2026: பவுர்ணமி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-13 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி இரவு 8.58 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : உத்திராடம் மாலை 5.08 வரை பிறகு திருவோணம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

பவுர்ணமி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசுக் காட்சி, சுவாமி விருஷபாருட தரிசனம் வியாஸ பூஜை, பட்டினத்து அடிகள் குரு பூஜை. ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திர வைபவம். சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரதோற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பணிவு

ரிஷபம் - நட்பு

மிதுனம் - முயற்சி

கடகம் - ஆக்கம்

சிம்மம் - இன்பம்

கன்னி - நிறைவு

துலாம் - கடமை

விருச்சிகம் - வெற்றி

தனுசு - தெளிவு

மகரம் - ஆதாயம்

கும்பம் - பெருமை

மீனம் - நலம்