ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஆகஸ்ட் 2026: திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-12 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை காலை 10.34 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 5.03 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - நலம்

மிதுனம் - வரவு

கடகம் - ஆதாயம்

சிம்மம் - போட்டி

கன்னி - முயற்சி

துலாம் - பயிற்சி

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - பரிசு

மகரம் - நிம்மதி

கும்பம் - உயர்வு

மீனம் - பயணம்