பராபவ ஆண்டு, புரட்டாசி-11 (திங்கள்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை இரவு 8.41 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.12 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி ஊஞ்சலில் காட்சியருளல். ருத்திரபசுபதியார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு, திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
மேஷம் - மேன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - முயற்சி
கடகம் - போட்டி
சிம்மம் - ஆதரவு
கன்னி - நட்பு
துலாம் - நன்மை
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆதாயம்
மகரம் - கடமை
கும்பம் - வெற்றி
மீனம் - சுபம்