ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 மே 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு வைகாசி-14 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி காலை 10.03 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : சித்திரை காலை 10.11 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகு காலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்

பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீஅம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அனுகூலம்

ரிஷபம்-லாபம்

மிதுனம்-நலம்

கடகம்-ஓய்வு

சிம்மம்-உற்சாகம்

கன்னி-சாதனை

துலாம்-பாராட்டு

விருச்சிகம்-புகழ்

தனுசு-வெற்றி

மகரம்-நிம்மதி

கும்பம்-ஆர்வம்

மீனம்-சிறப்பு