ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஜூலை 2026: கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஆடி-11 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி மாலை 5.47 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : மூலம் நண்பகல் 12.34 வரை பிறகு பூராடம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு

வாஸ்து நாள் (காலை 7.44க்கு மேல் 8.20க்குள் வாஸ்து செய்ய நன்று. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் உற்சவாரம்பம், அன்ன வாகனத்தில் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம்.

திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆர்வம்

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-பெருமை

கடகம்-இன்பம்

சிம்மம்-உற்சாகம்

கன்னி-உதவி

துலாம்-யோகம்

விருச்சிகம்-சாதனை

தனுசு-ஆக்கம்

மகரம்-பரிசு

கும்பம்-நன்மை

மீனம்-உண்மை