ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஏப்ரல் 2026: விநாயகர் கோவில்களில் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

பராபவ ஆண்டு, சித்திரை-14 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி இரவு 8.53 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : பூரம் இரவு 11.33 மணி வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். தூத்துக்குடி ஸ்ரீ நடராஜப் பெருமான் உருகு சட்ட சேவை. திரிசி ராமலை ஸ்ரீ சிவபெருமான் நந்திகேசுவரர் வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல், ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் இந்திர விமானத்தில் பவனி. திருப்பணந்தாள் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர். திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நட்பு

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - வரவு

கடகம் - வெற்றி

சிம்மம் - போட்டி

கன்னி - அமைதி

துலாம் - அன்பு

விருச்சிகம் - பாசம்

தனுசு - புகழ்

மகரம் - ஆதரவு

கும்பம் - நன்மை

மீனம் - துணிவு