பராபவ ஆண்டு, ஆவணி-9 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 8.50 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : திருவோணம் பின்னிரவு 2.20 வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவோண விரதம். ஓணம் பண்டிகை. ருக் உபாகர்மா. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம் கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.
மேஷம் - ஆதாயம்
ரிஷபம் - ஆதரவு
மிதுனம் - அன்பு
கடகம் - ஆக்கம்
சிம்மம் - சிறப்பு
கன்னி - போட்டி
துலாம் - பெருமை
விருச்சிகம் - லாபம்
தனுசு - உவகை
மகரம் - ஈகை
கும்பம் - உழைப்பு
மீனம் - வாழ்வு