ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஏப்ரல் 2026: வாசவி ஜெயந்தி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-13 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி இரவு 9.33 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : மகம் இரவு 11.27 வரை பிறகு பூரம்

யோகம் : மரண/சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்

கன்னிகாபரமேஸ்வரி பூஜை. வாசவி ஜெயந்தி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் உருகு சட்டச் சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர் பட்டாபிஷேகம். ஸ்ரீ சுவாமி ஸ்ரீஅம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருச்சி ராமலை ஸ்ரீ தாயுமானவர் திருக்கல்யாணம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம், தஞ்சை புன்னை ஸ்ரீ நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வரவு

ரிஷபம்- கடமை

மிதுனம்- லாபம்

கடகம்- நட்பு

சிம்மம்- களிப்பு

கன்னி- பரிசு

துலாம் - உவகை

விருச்சிகம் - நன்மை

தனுசு -ஆதாயம்

மகரம் - சாதனை

கும்பம் - பயணம்

மீனம் - ஈர்ப்பு