ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 செப்டம்பர் 2026: நடராஜர் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-8 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 11.12 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : சதயம் நண்பகல் 12.04 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

நடராஜர் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் தீர்த்தவாரி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி பின்னங்கிளி வாகனத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - வெற்றி

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - பெருமை

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - ஆதரவு

துலாம் - போட்டி

விருச்சிகம் - அனுகூலம்

தனுசு - பாசம்

மகரம் - சுகம்

கும்பம் - கனிவு

மீனம் - சுபம்

SCROLL FOR NEXT