ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 மே 2026: சிவகாசி விஸ்வநாதர் ரதோற்சவம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு வைகாசி-11 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி காலை 9.13 வரை பிறகு தசமி

நட்சத்திரம் : பூரம் காலை 7.19 வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்

சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம், இரவு பூச்சப்பரத்தில் பவனி. திருவாடானை ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் அண்ண வாகனத்தில் பவனி. காளையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான், திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கல்யாணம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் ஒன்பது கருட சேவை. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி, கோவில்பட்டி ஸ்ரீ செண்பக வல்லியம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சாதனை

ரிஷபம்-செலவு

மிதுனம்-அமைதி

கடகம்-முயற்சி

சிம்மம்-கடமை

கன்னி-பாசம்

துலாம்-சுகம்

விருச்சிகம்-பரிவு

தனுசு-தனம்

மகரம்-துணிவு

கும்பம்-வெற்றி

மீனம்-திறமை