பராபவ ஆண்டு, வைகாசி-9 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி காலை 11.07 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 7.50 வரை பிறகு மகம்
யோகம் : மரண/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விருஷப சேவை. திருப்புகழுர் ஸ்ரீ அக்னீஸ்வரர் புஷ்பப்பல்லக்கில் பவனி. அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், காட்டுப் பரூவூர்ஸ்ரீஆதிகேசப்பெருமாள் கோவில்களில் உற்சவாரம்பம். நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர் இந்திர விமானத்தில் புறப்பாடு. மாயவரம் ஸ்ரீ கௌரி மாயூரநாதர் கற்பக விருட்சம் வாகனத்தில் பவனி. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம் நயினார் கோவில் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
மேஷம் - நலம்
ரிஷபம் - துணிவு
மிதுனம் - முயற்சி
கடகம் - ஆதாயம்
சிம்மம் - பாராட்டு
கன்னி - லாபம்
துலாம் - அமைதி
விருச்சிகம் - போட்டி
தனுசு - ஆதரவு
மகரம் - ஆக்கம்
கும்பம் - ஊக்கம்
மீனம் - பணிவு