ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஆகஸ்ட் 2026: அனுமனுக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-6 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி மறுநாள் 5.33 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : மூலம் இரவு 7.48 வரை பிறகு பூராடம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சுபமுகூர்த்த தினம், ஏகாதசி, வாஸ்து நாள்

சுபமுகூர்த்த தினம். ஏகாதசி, மதுரை ஸ்ரீ சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். வாஸ்துநாள் காலை 7.23க்கு மேல் 7.59 வரை வாஸ்து பூஜை செய்ய நன்று. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோவில்களில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஜெயம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - உழைப்பு

கடகம் - பக்தி

சிம்மம் - பரிசு

கன்னி - நன்மை

துலாம் - உதவி

விருச்சிகம் - தாமதம்

தனுசு - ஆரோக்கியம்

மகரம் - லாபம்

கும்பம் - திறமை

மீனம் - சாதனை