ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஏப்ரல் 2026: குருபகவானுக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-10 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி பின்னிரவு 2.01 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு பூசம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு

சுபமுகூர்த்த தினம். வாஸ்து நாள் (காலை 8.54க்கு மேல் 9.30க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). திருக்கடவூர் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேஷ வாகனத்தில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வேடர்பறி லீலை, சுவாமி அம்பாள் இருவரும் குதிரை வாகன பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-ஆரோக்கியம்

மிதுனம்-லாபம்

கடகம்-ஈகை

சிம்மம்-சாதனை

கன்னி-உண்மை

துலாம்- கவனம்

விருச்சிகம்-கடமை

தனுசு- ஆர்வம்

மகரம்-வெற்றி

கும்பம்-பாராட்டு

மீனம்-நன்மை