பராபவ ஆண்டு, சித்திரை-9 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி காலை 6.24 வரை பிறகு சஷ்டி பின்னிரவு 3.38 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 3.02 வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சஷ்டி விரதம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலபிஷேகம். விரன் மீண்ட நாயனார் குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகப் பெருமாள், திருஉத்திரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி கோவிலில் உற்சவாரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தங்கப் பல்லக்கில் பவனி. இலஞ்சி ஸ்ரீ சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி. எம்பெருமானார், உடையவர் என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜரின் திருநட்சத்திர வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம், கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நலம்
கடகம்-நட்பு
சிம்மம்-பரிசு
கன்னி-சாந்தம்
துலாம்- கீர்த்தி
விருச்சிகம்-உதவி
தனுசு- போட்டி
மகரம்-ஆர்வம்
கும்பம்-பக்தி
மீனம்-அன்பு