பராபவ ஆண்டு, புரட்டாசி-4 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி இரவு 7.46 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திராடம் (முழுவதும்)
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம், இரவு சுவாமி புஷ்பக விமானத்தில் பவனி. ஏனாதி நாயனார் குரு பூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை, திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் பால் அபிஷேகம்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பாசம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - கீர்த்தி
கன்னி - வாழ்வு
துலாம் - அன்பு
விருச்சிகம் - லாபம்
தனுசு - ஈகை
மகரம் - உயர்வு
கும்பம் - களிப்பு
மீனம் - உற்சாகம்