ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஜூலை 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-5 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி காலை 8.41 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : சித்திரை நள்ளிரவு 1.21 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு

நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. வடமதுரை சௌந்தராஜப் பெருமாள் உற்சவாரம்பம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு, சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - திடம்

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - உண்மை

கடகம் - கடமை

சிம்மம் - கண்ணியம்

கன்னி - கட்டுப்பாடு

துலாம் - இன்பம்

விருச்சிகம் - வாழ்வு

தனுசு - பரிவு

மகரம் - பக்தி

கும்பம் - உழைப்பு

மீனம் - சிறப்பு