ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 ஆகஸ்ட் 2026: வரலட்சுமி விரதம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-4 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி நள்ளிரவு 1.37 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : அனுஷம் பிற்பகல் 2.45 வரை பிறகு கேட்டை

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம். குலைச்சிறை நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருஷபாரூட தரிசனம், சைவ சமயஸ்தா பித வரலாற்று லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.

லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பணிவு

கடகம் - புகழ்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - பாராட்டு

துலாம் - மேன்மை

விருச்சிகம் - ஆர்வம்

தனுசு - இன்பம்

மகரம் - தேர்ச்சி

கும்பம் - நன்மை

மீனம் - முயற்சி