பராபவ ஆண்டு சித்திரை-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி காலை 8.47 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : ரோகிணி காலை 6.15 வரை பிறகு மிருகசீர்ஷம் மறுநாள் விடியற்காலை 4.22 வரை பிறகு திருவாதிரை
யோகம் : அமிர்த/சித்த/மரணயோகம்
ராகு காலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஸ்ரீ மத்சங்கர ஜெயந்தி. சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், கந்தகோட்டம் வல்லக்கோட்டை முருகர் தலங்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம்-சுபம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-நட்பு
கடகம்-உவகை
சிம்மம்-பெருமை
கன்னி-நன்மை
துலாம்-முயற்சி
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு-பரிசு
மகரம்-பாராட்டு
கும்பம்-கவனம்
மீனம்-பயணம்