பராபவ ஆண்டு, புரட்டாசி-3 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி மாலை 5.56 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.22 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி, சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் காலை அபிஷேகம், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
மேஷம் - துணிவு
ரிஷபம் - பக்தி
மிதுனம் - நட்பு
கடகம் - நலம்
சிம்மம் - தனம்
கன்னி - இன்பம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - பொறுப்பு
தனுசு - கடமை
மகரம் - உறுதி
கும்பம் - சுகம்
மீனம் - ஆக்கம்