ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 மே 2026: மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-6 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி மாலை 4.38 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : திருவாதிரை காலை 11.13 வரை பிறகு புனர்பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு

வளர்பிறை சதுர்த்தி விரதம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்தில் இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் நடையவர் கூட புறப்பாடு. காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் யானை வாகன பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை, கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு, திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - சிறப்பு

மிதுனம் - சாந்தம்

கடகம் - நலம்

சிம்மம் - ஆதாயம்

கன்னி - அமைதி

துலாம் - உயர்வு

விருச்சிகம் - களிப்பு

தனுசு - வரவு

மகரம் - சுகம்

கும்பம் - பாராட்டு

மீனம் - முயற்சி