ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 மார்ச் 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-6 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை மறுநாள் விடியற்காலை 4.28 வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.12 வரை பிறகு அசுவினி

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

சந்திர தரிசனம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. பெரிய பெருமாள் திருநட்சத்திர வைபவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பக்தி

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-கவுரவம்

கடகம்-இன்பம்

சிம்மம்-நிறைவு

கன்னி-பணிவு

துலாம்- இரக்கம்

விருச்சிகம்-மகிழ்ச்சி

தனுசு- நட்பு

மகரம்-சுகம்

கும்பம்-நலம்

மீனம்-சிறப்பு