பராபவ ஆண்டு, ஆவணி-3 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி இரவு 11.49 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : விசாகம் நண்பகல் 12.26 வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் உலவாக் கோட்டையருளிய திருவிளையாடல்; நந்தீஸ்வர யாளி வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வேலூர் கோட்டை ஸ்ரீதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீதுர்கையம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம் - லாபம்
ரிஷபம் - நலம்
மிதுனம் - களிப்பு
கடகம் - செலவு
சிம்மம் - பரிசு
கன்னி - அமைதி
துலாம் - பாசம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பயணம்
மகரம் - உதவி
கும்பம் - ஆதரவு
மீனம் - உண்மை