பராபவ ஆண்டு, புரட்டாசி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 12.37 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : ரோகிணி காலை 7.23 மணி வரை பிறகு மிருகசீர்ஷம் மறுநாள் விடியற்காலை 4.27 வரை பிறகு திருவாதிரை
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
தேய்பிறை சஷ்டி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - பாசம்
கடகம் - அன்பு
சிம்மம் - தனம்
கன்னி - நலம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் - நன்மை
தனுசு - பயிற்சி
மகரம் - போட்டி
கும்பம் - பக்தி
மீனம் - உவகை