ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 மே 2026: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-4 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை இரவு 9.19 வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 2.33 வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி

சந்திர தரிசனம். சுபமுகூர்த்த தினம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் உற்சவாரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பூதவாகனத்தில் பவனி, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - போட்டி

ரிஷபம் - பக்தி

மிதுனம் - நன்மை

கடகம் - ஆதரவு

சிம்மம் - நிம்மதி

கன்னி - வரவு

துலாம் - சாதனை

விருச்சிகம் - சாந்தம்

தனுசு - பணிவு

மகரம் - தாமதம்

கும்பம் - லாபம்

மீனம் - துணிவு