ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 ஜூலை 2026: பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-2 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி காலை 9.37 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பூரம் இரவு 11.11 வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. காரமடை ஸ்ரீ ரங்கநாதர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - போட்டி

மிதுனம் - தனம்

கடகம் - லாபம்

சிம்மம் - உயர்வு

கன்னி - நிறைவு

துலாம் - போட்டி

விருச்சிகம் - இன்பம்

தனுசு - ஆதாயம்

மகரம் - செலவு

கும்பம் - பாராட்டு

மீனம் - பயணம்