ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள் - 17 செப்டம்பர் 2026: ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-31 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி நண்பகல் 12.06 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.51 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு

வளர்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - புகழ்

கடகம் - நட்பு

சிம்மம் - பாராட்டு

கன்னி - பொறுமை

துலாம் - பெருமை

விருச்சிகம் - அன்பு

தனுசு - திறமை

மகரம் - தனம்

கும்பம் - தாமதழ்

மீனம் - நற்செய்தி

SCROLL FOR NEXT