பராபவ ஆண்டு, கார்த்திகை - 1 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி பின்னிரவு 2.33 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : அவிட்டம் நள்ளிரவு 1.59 மணி வரை பிறகு சதயம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் தலங்களில் பால் அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கை, பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3 -ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோயிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம் - பொறுமை
ரிஷபம் - கடமை
மிதுனம் - பண்பு
கடகம் - பணிவு
சிம்மம் - அன்பு
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - இன்பம்
விருச்சிகம் - மாற்றம்
தனுசு - நற்செயல்
மகரம் - விவேகம்
கும்பம் - பரிவு
மீனம் - ஊக்கம்