ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 17 மே 2026: ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-3 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை இரவு 11.45 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : கார்த்திகை மாலை 4.01 வரை பிறகு ரோகிணி

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு வீதியிலும் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவாரம்பம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகன திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பக்தி

ரிஷபம் - பணிவு

மிதுனம் - பண்பு

கடகம் - பாசம்

சிம்மம் - ஆசை

கன்னி - ஆதரவு

துலாம் - உயர்வு

விருச்சிகம் - கடன்

தனுசு - முயற்சி

மகரம் - இரக்கம்

கும்பம் - ஆர்வம்

மீனம் - துணிவு