ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 அக்டோபர் 2026: வளர்பிறை சஷ்டி விரதம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-29 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி நாளை விடியற்காலை 5.08 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : கேட்டை காலை 7.19 வரை பிறகு மூலம்

யோகம் : மரண / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

வளர்பிறை சஷ்டி விரதம். சரஸ்வதி ஆவாஹனம் (சரஸ்வதி தேவியை கலசம் (அ) விக்கிரகத்திற்கு எழுந்தருளச் செய்து வரவேற்கும் புனித சடங்கு - சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மாற்றம்

ரிஷபம் - ஊக்கம்

மிதுனம் - ஈகை

கடகம் - கடமை

சிம்மம் - உவகை

கன்னி - பாசம்

துலாம் - தனம்

விருச்சிகம் - இன்பம்

தனுசு - விவேகம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - அமைதி

மீனம் - நலம்

SCROLL FOR NEXT