ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஜூலை 2026: ராகவேந்திர சுவாமிக்கு குரு வார திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-32 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை நண்பகல் 12.28 வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.04 வரை பிறகு மகம்

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு விழா தொடக்கம்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் முளைக்கொட்டு விழா தொடக்கம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குரு வார திருமஞ்சனம்.

ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நிறைவு

ரிஷபம் - அன்பு

மிதுனம் - அமைதி

கடகம் - லாபம்

சிம்மம் - நலம்

கன்னி - ஜெயம்

துலாம் - பலம்

விருச்சிகம் - சாந்தம்

தனுசு - ஆசை

மகரம் - வரவு

கும்பம் - கடமை

மீனம் - உவகை