பராபவ ஆண்டு ஆடி-31 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி இரவு 8.14 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரம் காலை 7.07 வரை பிறகு அஸ்தம்
யோகம் : அமிர்தயோகம்
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
வளர்பிறை சதுர்த்தி விரதம்.தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி உற்சவாரம்பம். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம் வைபவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியுலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
மேஷம் - நலம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - நற்செயல்
கடகம் - தாமதம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - உண்மை
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - விவேகம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - நற்செய்தி
மீனம் - இன்பம்