ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 மே 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-1 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி காலை 6.25 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : அசுவினி இரவு 6.57 வரை பிறகு பரணி

யோகம் : அமிர்த/சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு

மாத சிவாராத்திரி. ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் விடாயாற்று, வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் சன்னதி தெருவில் ரதோத்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவ சக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம் அலங்காரம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நற்செயல்

ரிஷபம் - பக்தி

மிதுனம் - உயர்வு

கடகம் - நன்மை

சிம்மம் - கவனம்

கன்னி - பாராட்டு

துலாம் - செலவு

விருச்சிகம் - பொறுமை

தனுசு - நற்செயல்

மகரம் - சாந்தம்

கும்பம் - லாபம்

மீனம் - களிப்பு