ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஏப்ரல் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு சித்திரை-2 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திரயோதசி இரவு 8.55 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : பூரட்டாதி நண்பகல் 1.33 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : அமிர்த/சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்

பிரதோஷம். மாத சிவராத்திரி. திருசெங்காட்டக்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் விடாயாற்று. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நற்செயல்

ரிஷபம்-பக்தி

மிதுனம்-உயர்வு

கடகம்-கவனம்

சிம்மம்-ஊக்கம்

கன்னி-செலவு

துலாம்- பொறுமை

விருச்சிகம்-மதிப்பு

தனுசு-சாந்தம்

மகரம்-உவகை

கும்பம்-ஈகை

மீனம்-களிப்பு