பராபவ ஆண்டு, ஆனி-30 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை மாலை 4.33 வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.20 வரை பிறகு பூசம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி தில தர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவாரம்பம் தோளுக்கினியானில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தெப்பம்.
மேஷம் - லாபம்
ரிஷபம் - போட்டி
மிதுனம் - உயர்வு
கடகம் - கடமை
சிம்மம் - கண்ணியம்
கன்னி - அமைதி
துலாம் - இன்பம்
விருச்சிகம் - தைரியம்
தனுசு - ஆதாயம்
மகரம் - செலவு
கும்பம் - வரவு
மீனம் - மாற்றம்