ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 அக்டோபர் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-26 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திருதியை இரவு 11.40 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : விசாகம் பின்னிரவு 2.42 மணி வரை பிறகு அனுஷம்

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு கொலு மண்டபத்தில் பட்டாபிஷேகக் காட்சி. திருமலைநம்பி திருநட்சத்திர வைபவம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையப்பன் புறப்பாடு. அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகையம்மன் சிறப்பு அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பாராட்டு

ரிஷபம் - மேன்மை

மிதுனம் - நலம்

கடகம் - பரிசு

சிம்மம் - சாந்தம்

கன்னி - கீர்த்தி

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - ஆர்வம்

மகரம் - பக்தி

கும்பம் - நன்மை

மீனம் - மேன்மை

SCROLL FOR NEXT