ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 மே 2026: நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-30 (]புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி காலை 9.37 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 8.58 வரை பிறகு ரேவதி

யோகம் : சித்த/மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு

சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வேதாரண்யம் திருமறைக்காடர் கோவிங்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - அமைதி

மிதுனம் - பாராட்டு

கடகம் - பெருமை

சிம்மம் - சுகம்

கன்னி - முயற்சி

துலாம் - வெற்றி

விருச்சிகம் - வரவு

தனுசு - திறமை

மகரம் - தனம்

கும்பம் - களிப்பு

மீனம் - லாபம்