ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 13 ஜூலை 2026: கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-29 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 6.52 வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 3.47 வரை பிறகு புனர்பூசம்.

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு

போதாய அமாவாசை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - சுகம்

கடகம் - வெற்றி

சிம்மம் - வரவு

கன்னி - லாபம்

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - மாற்றம்

தனுசு - மேன்மை

மகரம் - வரவு

கும்பம் - முயற்சி

மீனம் - பயிற்சி