பராபவ ஆண்டு, ஆனி-28 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி இரவு 9.18 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரோகிணி காலை 7.01 வரை பிறகு மிருகசீர்ஷம் மறுநாள் விடியற்காலை 4.20 வரை பிறகு திருவாதிரை
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரதோஷம். மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
மேஷம் - பணிவு
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - போட்டி
கடகம் - நற்செயல்
சிம்மம் - ஆசை
கன்னி - பெருமை
துலாம் - நற்சொல்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பரிசு
மகரம் - பரிவு
கும்பம் - உற்சாகம்
மீனம் - வரவு