பராபவ ஆண்டு, ஆடி-27 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூசம் காலை 9.10 வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஆடி அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். விருதுநகர் சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் புறப்பாடு.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம்.
மேஷம் - நலம்
ரிஷபம் - பொறுப்பு
மிதுனம் - லாபம்
கடகம் - போட்டி
சிம்மம் - நட்பு
கன்னி - ஆதரவு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - உதவி
தனுசு - தேர்ச்சி
மகரம் - நன்மை
கும்பம் - புகழ்
மீனம் - முயற்சி