ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 ஆகஸ்ட் 2026: முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-26 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி பின்னிரவு 2.10 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : புனர்பூசம் காலை 10.30 வரை பிறகு பூசம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி

மாத சிவராத்திரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் வசந்த உற்சவம். ஸ்ரீ திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த் தாழி சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியலிலும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்திலும் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உயர்வு

ரிஷபம் - நட்பு

மிதுனம் - வெற்றி

கடகம் - அமைதி

சிம்மம் - சிறப்பு

கன்னி - உண்மை

துலாம் - உறுதி

விருச்சிகம் - பெருமை

தனுசு - பொறுமை

மகரம் - நட்பு

கும்பம் - பயணம்

மீனம் - உறுதி